×

பைக்கில் இருந்து விழுந்து அதிபர் இடுப்பில் காயம்

மணிலா: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி (74).  இவர் நேற்று முன்தினம் இரவு மாலாகனாங் பங்களா வளாத்திற்குள் பைக் ஓட்டியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் அதிபரின் இடுப்பில் காயமேற்பட்டுள்ளது. இது குறித்து அரசு செய்தி ெதாடர்பாளர் சால்வாடர் பனாலியோ கூறுகையில், ‘‘புதன்கிழமை இரவு அதிபர் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, கீழே குனிந்து தனது காலில் உள்ள காலணியை சரி செய்ய முயன்றபோது இருசக்கர  வாகனத்தில் இருந்து விழுந்து விட்டார். இதில் அவரது இடுப்பு, முழங்கை மற்றும் முட்டியில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார், என்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக அதிபர்ரோட்ரிகோவிற்கு  மய்ஸ்தீனியா கிராவிஸ் எனப்படும் நரம்பு மண்டல கோளாறு இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chancellor , Pike, Chancellor, hip injury
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...