×

சேலத்தில் டெங்குவுக்கு இளம்பெண் பலி

சேலம்: சேலம் மணக்காடு ராஜகணபதி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி யோகேஸ்வரி (28). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல் கணேசபுரத்தில் வசித்துள்ளனர்.  இந்நிலையில் யோகேஸ்வரி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு  டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி யோகேஷ்வரி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.


Tags : teen ,Salem , Salem, dengue, teenagers killed
× RELATED பைக் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் உடல் கருகி பலி