×

450 கோடி ஜிஎஸ்டி மோசடி: ஈரோடு தொழிலதிபர் கைது

ஈரோடு: ரூ.450 கோடி அளவுக்கு ஜிஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்ட கட்டமைப்பு நிறுவனம் ‘அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட்’. இந்நிறுவனம் நாடு முழுவதும் அரசு ஒப்பந்தங்கள் உட்பட பல கட்டுமான  திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் விசாகப்பட்டினத்தில் எந்த சேவையும் அளிக்காமல் போலி ரசீதுகளை கொடுத்தும், பெற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரக  அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில், ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் திடீர்  சோதனை நடத்தினர்.

இதில் எந்த சேவையும் அளிக்காமல் போலி ரசீதுகள் உருவாக்கியதை, இந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியம் அசோக் குமார் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் கடந்த 2018 செப்டம்பர் முதல் கடந்த ஆகஸ்ட்   வரை போலி ரசீதுகள் மூலம் ரூ.450 கோடிக்கு ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நிறுவனர்  சுப்ரமணியம் அசோக் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஜிஎஸ்டி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Tags : businessman ,Erode , GST fraud, Erode businessman arrested
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்