×

துபாயில் மேல்படிப்புக்காக வந்த ஐரோப்பிய மாணவியை கர்ப்பமாக்கிய இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது : சென்னை மகளிர் போலீஸ் அதிரடி

சென்னை: துபாயில் மேல்படிப்பு படிக்க வந்த ஐரோப்பிய மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய விவகாரத்தில், சென்னை இளம் தொழிலதிபரை அவரது தந்தையுடன் மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவை ேசர்ந்தவர் அப்துல் கரீம். தொழிலதிபரான இவருக்கு ருமைஸ் அகமது (28) என்ற மகன் உள்ளார். இளம் தொழிதிபரான ருமைஸ் அகமது, பெரிய அளவில் இறால், மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், தொழில் தொடர்பாக துபாய் நாட்டிற்கு சில மாதங்களுக்கு முன் சென்றபோது, அங்கு மேல் படிப்புக்காக வந்திருந்த ஐரோப்பா ஒன்றியம் லிதுவேனியா நாட்டை சேர்ந்த மாணவி உக்னே பெரேவேரி செவைத் (22) என்பவரை, ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர், காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் உக்னே பெரேவேரி 5 மாதம் கர்ப்பமானார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு தனது காதலியை ருமைஸ் அகமது அழைத்து வந்துள்ளார். பிறகு, ருமைஸ் அகமது அமைந்தகரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல், எழும்பூரில் ஒரு ஓட்டலில் தங்க வைத்துள்ளார்.

இதற்கிடையே கர்ப்பமாக இருந்த உக்னே ெபரேவேரி செவைத்தை, ருமைஸ் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் கருவை கலைத்தால் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று கூறி, மாணவியை கட்டாயப்படுத்தி கடந்த ஜூன் 21ம் தேதி ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பத்தை கலைத்துள்ளார். அதன் பிறகும் உக்னே பெரேவேரி செவைத்துடன் ருமைஸ் அகமது தனிமையில் இருந்துள்ளார். இதனால் மீண்டும் அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்ய கோரி ருமேஸ் அகமதுவை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ருமைஸ் அகமது திருமண பேச்சை தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பிறகு அவர் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உக்னே பெரேவேரி செவைத் தனது காதலனை பலமுறை தொடர்பு கொண்டும், முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்ைனயில் எந்த அதரவும் இன்றியும், சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும் தவித்துள்ளார். பிறகு வேறு வழியின்றி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காதலித்து கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீதும், கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைத்த காதலன் தந்தை அப்துல் கரீம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்படி போலீசார், ருமைஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் மீது ஐபிசி 417, 313,506 (i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அமைந்தகரை வீட்டில் இளம் தொழிலதிபர் ருமைஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீமை கைது செய்தனர்.

Tags : businessman father ,student ,Dubai Young ,European ,businessman , Young businessman arrested , Dubai
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...