×

பொதுத்துறைகளை கொள்ளையடித்து சூட்பூட் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார் : மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி:  பிரதமர் மோடியை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டர் பதிவை ஒன்றை இந்தியில் வெளியிட்டுள்ளார். அத்துடன் பிரதமர் மோடி ஏர்-இந்தியா விமான நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை விற்பனை செய்வது போன்ற கார்ட்டூனையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், ‘பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடித்து அதை சூட் பூட் அணிந்த தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார் பிரதமர் மோடி. இதனால், லட்சக்கணக்கான பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பணி நிச்சயமற்ற நிலையால் பீதி அடைந்துள்ளனர்.  இந்த கொள்ளைக்கு எதிராக போராடும் அதன் ஊழியர்களுக்கு நான் தோள்கொடுத்து உதவுவேன்,’ என கூறியுள்ளார்.

Tags : Rahul ,Modi ,friends ,Goodwood , Spoiled by the public sector, Goodwood shares,friends
× RELATED பொதுத்துறை வங்கிகள், நிதி அமைப்புகளை...