×

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்பட்டது: போரிஸ் ஜான்சன் ட்வீட்

பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையேயான பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். பெல்ஜியம் தலைநகர் ப்ரெஸல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க பிரிட்டன் நாடாளுமன்றம் சனிக்கிழமை கூடுவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வருகிற 31ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில் பிரிட்டன் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி விலகுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க உடன்பாடு எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாகவே பிரெக்ஸிட் ஒப்பந்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலும், பிரிட்டன் நாட்டிலும் பல்வேறு எதிர்ப்புகளும், விவாதங்களும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு, அப்போதைய பிரதமராக தெரசா மே பதவி வகித்த போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்திருந்தனர். அப்போதிலிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்வேறு கட்ட விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மேலும், அப்போது இருந்த ஆளும்கட்சி எம்.பிக்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தது. இந்த தருணத்தில் தான் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதயேற்றார்.

புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். இந்த நிலையில், ப்ரெஸல்ஸில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும். இதையடுத்து வரும் சனிக்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றம் இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது.

Tags : Brexit ,Boris Johnson ,EU ,UK , Britain, New Deal, Brexit, Reached, Boris Johnson, DeWitt
× RELATED அமெரிக்காவிடம் 2,290 கோடியில் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்