×

கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்

மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர், 100 சர்வதேச சதங்களை விளாசியவர் உட்பட பல்வேறு சாதனைகளைக்கு சொந்தக்காரரான சச்சின், 46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது 24 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் 200 டெஸ்ட், 463 ஒரு நாள் போட்டிகள், ஒரு சர்வதேச டி20 போட்டி என விளையாடி சச்சின் 30,000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் 78 போட்டிகளில் விளையாடினார். 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் ஒரு சாதனை படைத்தார்.

மேற்கிந்திய வீரர் லாரா 131 டெஸட் போட்டியில் விளையாடி 11,953 ரன்கள் எடுத்து டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். சச்சின் 152வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை முறியடித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை சச்சின் இன்று தான் நிகழ்த்தினார். இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Tags : Sachin ,BCCI , Sachin, BCCI
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...