×

பெங்களூருவில் 64 அடி உயர கோதண்டராமர் சிலையை தொடர்ந்து ஆதிசேஷன் சிலை அமைக்க 230 டன் பாறை 128 டயர் ராட்சத லாரியில் புறப்பட்டது: வந்தவாசி அருகே மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு

வந்தவாசி: பெங்களூருவில் 64 அடி உயர கோதண்டராமர் சிலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிசேஷன் சிலை அமைக்க 230 டன் பாறை 128 டயர்கள் கொண்ட ராட்சத லாரி மூலம் புறப்பட்டது.கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை ஒரே கல்லில் செய்வதென முடிவு செய்யப்பட்டது. சுவாமி சிலை, ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கவும் முடிவு செய்தனர்.இதற்கான பாறை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலை குன்றில் இருப்பது கண்டபிடிக்கப்பட்டது. இந்த பாறையை எடுக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோயில் அறக்கட்டளை சார்பில் அனுமதி பெறப்பட்டது.பின்னர், சுவாமி சிலை செய்வதற்காக 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி பருமனுடன் சுமார் 380 டன் எடையுள்ள பாறையும், ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி பருமனுடன் சுமார் 230 டன் எடையுள்ள பாறையும், நவீன இயந்திரங்கள் மூலம் கடந்த 2017ம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு சுவாமி சிலை செய்வதற்கான 380 டன் பாறையை மட்டும் 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதிசேஷன் சிலை செய்வதற்கான 230 டன் பாறையை பெங்களூருவுக்கு கொண்டு செல்லும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக 128 டயர்கள் கொண்ட கன்டெய்னர் லாரியில் ஏற்றும் பணி நடந்தது.இப்பணிகள் முழுவதுமான நிறைவு பெற்று நேற்று மாலை புறப்பட்டது. ஏராளமானோர் அங்கு திரண்டு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து லாரியை வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து லாரி தெள்ளார் வழியாக வந்தவாசி வந்தது. அங்கிருந்து செய்யாறு, ஆற்காடு, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.அதன்படி நேற்று மாலை புறப்பட்ட லாரி வந்தவாசியில் இருந்து சுமார் 10 கி.மீ தூரம் திண்டிவனம் சாலையில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இங்கிருந்து புறப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 40 கி.மீ. தூரம் கணக்கிட்டு 10 நாட்களில் பெங்களூரு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது….

The post பெங்களூருவில் 64 அடி உயர கோதண்டராமர் சிலையை தொடர்ந்து ஆதிசேஷன் சிலை அமைக்க 230 டன் பாறை 128 டயர் ராட்சத லாரியில் புறப்பட்டது: வந்தவாசி அருகே மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Vandavasi ,Adisashan ,Kothandarama ,
× RELATED சுகாதாரமற்ற சூழலில் காய்கறி விற்பனை