பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை

சென்னை  : சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர், தனது பதிவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார் ? என்ற அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி இருக்கிறார்.

இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி எனப்படும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், இவர் தேர்வு செய்யப்பட்டால் சுமார் ஓராண்டு காலம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ளது.

Related Stories:

>