×

போலி ரசீதுகள், ஆவணங்களை காட்டி ரூ.450 கோடி ஜிஎஸ்டி வரிமோசடி செய்த ஈரோடு தொழிலதிபர் கைது!

ஈரோடு: ரூ.450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த அன்னை இன்பிரா என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தப்பணிகளை முடியாமலேயே செய்து முடித்ததாக போலி ரசீதுகளை ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெருந்துறை சிப்காட் பகுதியில் பைப் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர மேலும் சில தொழிற்சாலைகளை அவர் நடத்தி வருகிறார். பைப்புகளை விற்பனை செய்ததில் போலி ரசீது மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி.,- யின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் போலி ரசீதுகளை கைப்பற்றியுள்ளனர். அதில் மொத்தம் 450 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தொழிலதிபர் அசோக்குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 30ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் அசோக்குமார் ஈரோட்டை மையமாக வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்தில் ( 2018 முதல் ஆகஸ்ட் 2019ம் ஆண்டு வரை) மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியில் மோசடி நடத்தி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : businessman ,Erode , GST tax, fraud, Erode, businessman, arrested
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்