×

நாகர்கோவிலில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொது மக்கள் திரும்பி செல்லும் அவலம்

நாகர்கோவில்: குமரி  மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள்  போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில்  இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதே போல் சிறப்பு முகாம்கள்  மூலமாகவும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில்  தடுப்பூசி  தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்கவும், அனைவரும்  தடுப்பூசி போட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக வருகின்றனர்.   ஆனால் தடுப்பூசி மையங்களில் போதிய தடுப்பூசி மருந்து இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். ஆனால் போதிய மருந்து ஸ்டாக் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை மருத்துவமனைக்கு வந்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியவில்லை. இதையடுத்து ஊசி போட வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கி  வைத்துக்கொண்டு மருந்து வந்ததும் தகவல் தெரிவிக்கிறோம்.  அதன் பிறகு வந்து  தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி விட்டதாக பொது மக்கள் கூறினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மையங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்….

The post நாகர்கோவிலில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொது மக்கள் திரும்பி செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Nagargo ,Kumari District ,Covishild ,Kovacin ,Corona ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...