×

தொடரும் கனமழை எதிரொலி: கால்நடைகளுக்கு உணவாகும் அழுகிய கேரட் பயிர்கள்

ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், கேரட் அழுக துவங்கியுள்ளதால் வீணான கேரட்கள் கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, ெகால்லிமலை, செலவிப்நகர், முத்தோரை பாலாடா, கல்லக்கொரை ஆடா உள்ளிட்ட பல பகுதிகளில் 120 நாள் பயிரான கேரட் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை ெகாட்டி வரும் நிலையில் பல இடங்களில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் தாழ்வான காய்கறி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கின.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மண் குவியல்கள் விவசாய நிலங்களில் குவிந்துள்ளன. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த காய்கறி பயிர்கள் மூழ்கின. இதில் அதிகபட்சமாக கேரட் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேரட் அழுக துவங்கியுள்ளன. இதனால் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேரட் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிகளவில் கேரட் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுவதால், விலையும் குறைந்துள்ளது.

நீரில் முழ்கியிருந்ததால் பெரும்பாலான கேரட்கள் அழுகியுள்ளன. இதனால் கழுவதற்காக கொண்டு வரப்படும் கேரட்களில், அழுகியவை தனியாக பிரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிலோ கேரட்கள் நீரோடைகள் ஓரம் மற்றும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இவை கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Carrot
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...