×

காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர நான்காவது காவல் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு

சென்னை : காவலர்களின் குறைகளை போக்கவும், காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும், தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது.கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆணையத்தின் உறுப்பினர்களாக வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளர் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திமுக ஆட்சி காலத்தில் 1969, 1989 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மூன்று காவல் ஆணையங்களை அமைத்திருந்தார். தற்போது முதன் முறையாக அதிமுக ஆட்சிக்காலத்தில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Tags : Tamil Nadu ,government ,police commission ,Fourth Police Commission , Guards, Tamil Nadu Government, Police Commission
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...