×

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக மட்டுமே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது என தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தான் தற்போது தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போன நிலையில், அக்டோபர் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை மழை சற்று குறையும் என தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அரபிக்கடல் பகுதியில் காற்றின் சுழற்சி தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் சின்னம் உருவாக வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு பாதிப்பு:

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைத்துள்ளனர். கனமழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தால் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளானது.


Tags : rainfall ,Tamil Nadu ,Bay of Bengal ,New Delhi ,Weather Center , Meteorological Center, Rainfall, Madras, Tamil Nadu, New Delhi, Overlay Cycle
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...