×

அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் 3 ரவுடிகள் சரண்: முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு வலை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் காசினோ திரையரங்கம் அருகே கடந்த 10ம் தேதி பகல் 12.30 மணிக்கு ரவுடிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு மிகுந்த அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ராயப்பேட்டை பாடர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவியும் வக்கீலுமான மலர்கொடி (50), அவரது மகன் அழகுராஜா (31), அழகுராஜா ஆதரவாளர்கள் திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ெசன்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் தலைமறைவாக இருந்த பல்லாவரத்தை ரவுடி கவுதமன் சரணடைந்தார். அதை தொடர்ந்து பெண் வக்கீல் மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜாவை கொலை செய்ய முயன்ற மயிலாப்பூர் பிரபல ரவுடியான சிவகுமாரின் ஆதரவாளர்களான திருவல்லிக்கேணியை ேசர்ந்த ஜெகதீசன் (27), அருண் (27), ராய்பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (28) ஆகிய 3 ரவுடிகள் நேற்று மாலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் காயத்ரிதேவி முன்பு சரணடைந்தனர். அதை தொடர்ந்து 3 ரவுடிகளையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவகுமாரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.„ கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த சிந்தாமணி (41),  சசிகலா ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் கொளத்தூர் 200 அடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேன் மோதியதில் சிந்தாமணி சம்பவ இடத்தில் இறந்தார். சசிகலாவுக்கு சிறு காயம் ஏற்பட்டது. வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

2 லாரி டிரைவர்கள் சரண்
செங்குன்றம் அடுத்த கோட்டூர், கோமதியம்மன் நகர் பிரதான சாலையில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சித்ரா (29), அவரது கணவர் ராஜ் மற்றும் மகன் மோனிஷ் (10), சித்ராவின் தம்பி கார்த்திக் (26) ஆகியோர் வசித்து வருகின்றனர். வீட்டின் மேல்தளத்தில் கணவரை பிரிந்த பவித்ரா (30) என்ற பெண் தனியே வசித்து வருகிறார். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இதுகுறித்து வீட்டு உரிமையாளரிடம் சித்ரா கூறியிருக்கிறார். இதையடுத்து பவித்ராவிடம் வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த பவித்ரா, தனது கள்ளக்காதலன் வினோத்திடம் சித்ராவை பழிவாங்குமாறு கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இரவு சித்ராவின் வீட்டுக்கு வினோத் சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ரா, கார்த்திக், மோனிஷ் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டார். புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான வினோத் (23), மற்றொரு வினோத் (25) ஆகிய இருவரும் சரணடைந்தனர்.



Tags : rounds ,Chengalpattu Court ,Saran ,Sivakumar. ,Anna Salai ,Sivakumar , bomb blast , Anna Salai,Chengalpattu ,Sivakumar
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்