×

ஐஏஎஸ் அதிகாரி மகளுடன் நெருக்கமாக இருந்து ஏமாற்றிய விவகாரம் தொழிலதிபரின் இரண்டு மகன்கள் கைது: நியாயம் கேட்டவரை அடித்து விரட்டியது அம்பலம்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த ஐஏஎஸ் அதிகாரி தற்போது ஆவின் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். இவருக்கு 21 வயதில் மகள் உள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படிப்பை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். அவருடன் அண்ணாநகர் டி-செக்டார் 7வது தெருவை சேர்ந்த லெதர் வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் மகன் இர்பான் (21) என்பவரும் படித்துள்ளார். தொழிலதிபர் மகன் என்பதால் ஐஏஎஸ் அதிகாரி மகள் சகஜமாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இர்பான் தற்போது வண்டலூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சிஎஸ்சி இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இர்பான் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஐஏஎஸ் மகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் இர்பான் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் இர்பான் ஐஏஎஸ் அதிகாரி மகளிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி மகள் தனது காதலன் வீட்டிற்கு  சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது இர்பான் சகோதரர் இம்ரான் அங்கு வந்த ஐஏஎஸ் அதிகாரி மகளை அடித்து,‘‘இனி என் தம்பியை தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன்’’ என்று மிரட்டி வெளியே துரத்தியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஏஎஸ் அதிகாரி மகள் கடந்த 12ம் தேதி தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமாரை சந்தித்து புகார் அளித்தார். அதன்படி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர், ஐஏஎஸ் அதிகாரி மகளிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், நியாயம் கேட்க வந்த பெண்ணை தாக்கி காதலன் சகோதரர் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.அதை தொடர்ந்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார், காதலன் இர்பான் மீது ஐபிசி 417, 420, 406, 506(i),  மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புறுத்தல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரது சகோதரர் இம்ரான் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் இர்பான் மற்றும் இம்ரானை  ேநற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : sons ,businessman ,affair ,IAS officer ,Ambalantha , heating affair , IAS,daughter, arrested
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி