×

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக சென்னை தொழிலதிபர் மீது ஐரோப்பியா மாணவி புகார்: தலைமறைவானவருக்கு வலை

சென்னை: சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவை ேசர்ந்தவர் ருமேஸ் அகமது (28). இளம் தொழிலதிபர். இவர், பெரிய அளவில் இறால் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், தொழில் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐரோப்பாவில் உள்ள லிதுவேனியா நாட்டை சேர்ந்த உக்னே பெரேவேரி செவைத் (22) என்ற மாணவி துபாய் நாட்டில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். அங்கு உக்னே பெரேவேரியும், செவைத் இளம் தொழிலதிபர் ருமேஸ் அகமதுவும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததால் உக்னே பெரேவேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பின்னர் இந்தியாவிற்கு தனது காதலியை ருமேஸ் அகமது அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ருமேஸ் அகமதுவின் தந்தை கட்டாயப்படுத்தி கடந்த ஜூன் 21ம் தேதி ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து செவைத் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மீண்டும் செவைத் இரண்டு மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ருமேஸ் அகமதுவிடம் திருமணம் செய்யக்கோரி உக்னே பெரேவேரி வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் ெசய்யாமல் அவர் தலைமறைவாகி விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த உக்னே பெரேவேரி செவைத் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ருமேஸ் அகமதுவை தேடி வருகின்றனர்.


Tags : student ,EUROPEAN ,Chennai ,love Fellow ,businessman ,entrepreneur , love ,cheated, Europe student, complains,Chennai, entrepreneur
× RELATED பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து பலி: சென்னை அமைந்தகரையில் சோகம்