×

ஒரு மாத பரோல் கேட்டு நளினி மீண்டும் மனு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் வேலூர் மத்திய சிறையில் முருகனும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய ஐகோர்ட் அனுமதியுடன் ஜூலை 25ம் தேதி பரோலில் வந்த நளினி 51 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 15ம் தேதி மீணடும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது நளினி, ஒரு மாதம் பரோல் கேட்டு, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் நேற்று மனு அளித்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இலங்ைகயில் உள்ள முருகனின் தந்தை உடல்நல குறைவாக உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளார். அவர் சிகிச்சை பெறும் காலத்தில் அவருடன் துணையாக இருக்க ஒரு மாதம் பரோல் கேட்டு உள்ளார்’ என்றனர்.

Tags : Nalini , Nalini re-petitioned, month's parole
× RELATED வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாத காலம் சிறைச்சலுகைகள் ரத்து