×

அகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு மத்தியில் பா.ஜ ஆட்சிக்கு வந்த பின் தினமும் 52 விவசாயிகள் தற்கொலை

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு மாநாடு மற்றும் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா கூறுகையில், ‘‘விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 52 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் தற்கொலை சதவீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

ஆட்சியாளர்கள் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முன் வர வேண்டும். 44 ஆசிய பிராந்திய நாடுகளிடையே வரியில்லாமல் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரும் நவ.4ம் தேதி மத்திய பாஜ அரசு கையெழுத்திட உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கண்டித்து நவ.4ல் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது’’ என்றார்.


Tags : BJP , 52 farmers commit suicide ,every day , BJP takes office
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...