×

பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் உதவியாளர்கள் முற்றுகை எதிரொலி: பதவி உயர்வுக்கு தகுதியான பட்டியலை அனுப்ப வேண்டும்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர் முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை, மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில்,  உதவியாளர்களாக பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2018-19, 2019-20க்கான உதவியாளரில் இருந்து சார்பதிவாளர் இரண்டாம் நிலை பதவி உயர்வு  பட்டியல் தயார் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மூத்த உதவியாளர்கள் 36 பேர், சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ஐஜி ஜோதி நிர்மலா 1  வாரத்தில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று உதவியாளர்களிடம் உத்தரவாதம் அளித்தார்.

இதை தொடர்ந்து உதவியாளர்கள் போராட்டத்ைத கைவிட்டனர்.பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-19ம் ஆண்டுக்கான  இரண்டாம் நிலை சார்பதிவாளர் முறையான தேர்ந்த பெயர் பட்டியல் தயாரிக்க 1.1.2018ல் உள்ளபடியான உதவியாளர்கள் முதுநிலை பட்டியலில் 1 முதல் 150 வரையில் உள்ள நபர்களை பொருத்தும் மற்றும் அப்பட்டியலில் இடம் பெறும்  அனைத்து அட்டவணை வகுப்பினர்/அருந்ததியினர்/பழங்குடியினரை பொருத்தும் தேவையான விவரங்களை உரிய படிவத்தில் அனுப்பி வைக்க கோரப்பட்டு அறிக்கைகளும் பெறப்பட்டன.

தற்போது மேற்படி பட்டியலில் வரிசை எண் 1 முதல் 150 வரை உள்ள உதவியாளர்கள் மீதான நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள், தண்டனைகள் குறித்த விவரத்தையும் தனியார்களின் பணி பதிவேட்டின் முதல் பக்க நகலையும் அத்தாட்சி  செய்து உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்டவாறு அனுப்பப்படும் அறிக்கையுடன் உதவியாளர்கள் குறித்த கருத்துரு படிவம் முன்பு அனுப்ப விடுபட்டிருப்பின் அதனையும் இணைத்து அக்டோபர் 21ம் தேதிக்குள்  அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : IG Office of the Registration Siege Echo , Registration Department, IG Office, Assistant Siege, Promotion
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...