×

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 பேர்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது. 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி  முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம்
சந்தோஷ் கே மிஸ்ரா    63838 98300
கே.பாலச்சந்திரன்    97912 23322
எம்.ஆசியா மரியம்    97901 79598
எம்.வள்ளலார்    75300 02102
சிவசண்முகராஜா    98412 76600
என்.சுப்பையன்    75500 69129
எம்.எஸ்.சண்முகம்    97890 44363
கே.செந்தில்ராஜ்    044-29510300
ஏ.அருண் தம்புராஜ்    94440 01866
எம்.மதிவாணன்    94454 77810
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்    75980 73870

திருவள்ளூர் மாவட்டம்
எஸ்.கே.பிரபாகர்    97910 16565



Tags : IAS ,IAS officers ,Tamil Nadu ,monsoon ,Kanchipuram district ,North East , Northeast Monsoon, Tamil Nadu, IAS Officers Committee Appointed, Kanchipuram
× RELATED முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்