×

நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக சரிவு,..ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்கம்

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக சரிந்ததால், பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு பரிசல் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளா  வயநாடு, கர்நாடக மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை விதிப்பால்  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். ஆனால் பரிசல்  ஓட்டிகள், தங்களுக்கு நிவாரணம் கோரி பரிசல் இயக்காமல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்,  நீர்வரத்து நேற்று காலை 6 ஆயிரம் கன அடியாக மேலும் சரிந்தது. இதையடுத்து பரிசல் ஓட்டிகளில் ஒரு தரப்பினர், நேற்று காலை பரிசல்களை இயக்கினர். இதை அறிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்து  மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் பரிசல் இயக்காமல் ஒருதரப்பினர் போராட்டம் அறிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் பரிசல் இயக்கியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  இதையடுத்து பாதுகாப்பு  ஏற்பாடுகளை ஒகேனக்கல் ேபாலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Tags : Hogenakkal , Water fall, octagonal, gift movement
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு