×

மலைப்பாதை பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 7 பேர் உடல் நசுங்கி பலி

திருமலை: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த 24 பேர் ஒரு வேனில் கடந்த 12ம் தேதி தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் கோதண்டராம சுவாமி கோயில், சைலம், மகாநந்தி, பத்ராசலம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்திற்கு நேற்று சென்றனர். மரேடுமில்லி மலைப்பாதையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அவ்வழியாக நீண்ட நேரமாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

மேலும் செல்போன் சிக்னலும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி ரம்பசோடவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீனிவாசலு(62), முத்துகிருஷ்ணம்மா(56), சுவேதா(25), காயத்திரியம்மா(52), ரமேஷ்(56), அமிர்தவாணி(48), ராமலட்சுமியம்மா(50) ஆகிய 7 பேர் இறந்தனர். கீதாலட்சுமி, மற்றொரு ஸ்ரீனிவாசலு, மற்றொரு சுவேதா, வெங்கடாசலபதி, ெஜகன்நாதஷெட்டி, லட்சுமிமூர்த்தி மற்றும் 2வயது குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை மீட்டு ரம்பசோடவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Van ,pilgrims , The mountain pass, the van toppled
× RELATED சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!