×

கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம்: கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனையின் போது ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய  40 இடங்களில் கத்தை கத்தையாக ரொக்கப்பணம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் இருக்கும் ஆசிரமத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர், அதேபோன்று தமிழகத்திலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சென்னையை பொறுத்தவரை கல்கி ஆசிரமத்திற்கு தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சோதனையிட்டனர். குறிப்பாக கல்கி பகவான் மற்றும் அவருடைய மகன் கிருஷ்ணாவுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. மேலும் ஆசிரமத்தின் சி.இ.ஓ. எனப்படும் லோகேஷ் என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணியில் இருந்து வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமில்லாது இவர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கட்டு கட்டாக சிக்கி இருப்பதாகவும், அந்த சொத்து விவரம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் குறிப்பாக இந்த ஆசிரமத்தில் சோதனை நடத்த முக்கிய காரணம் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனைகள் நடப்பதாக எழுந்த சந்தேகத்தில் பேரில் தன இந்த சோதனையானது நடைபெற்றது.

அதன் அடிப்படையில் வெளிநாட்டில் பணப்பரிவர்த்தனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை எவ்வளவு பணம் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த சோதனையை தொடர்ந்து நடத்த உள்ளனர். இந்த சோதனை இன்னும் 2 அல்லது 3 நாடுகளுக்கு தொடரும் என வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் தான் இந்த ஆசிரமத்தில் தொடர்புடைய நிறுவனங்களிலும் சோதனையானது நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து கல்கி ஆசிரமம் சார்பாக தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து கல்கி ஆசிரமத்திற்கு வரும் நிதியான பல லட்சம் வசூலிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதன் அடிப்படையில் தன இவர்கள் வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், டிரஸ்ட்-க்கு வரும் பணத்தை முறையாக நிதிக்கு பயன்படுத்தாமல் நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் பல்வேறு ஆவணங்களும் கோடிக்கணக்கில் ரொக்க பணமும் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : places. ,raids ,Kalki Monastery ,Kalki Ashram , Kalki Monastery, located, has been seized , seized cost , Rs 20 crore
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...