×

நெதர்லாந்தில் பாதாள அறையில் 9 ஆண்டுகளாக அடைப்பட்டிருந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் பத்திரமாக மீட்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் பண்ணை வீடு ஒன்றின் பாதாள அறையில் சுமார் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 6 இளைஞர்களையும் அவரது தந்தையையும் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். அந்நாட்டின் ரூனர்வொல்ட் கிராமத்தில் பார் ஒன்றுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த பார் உரிமையாளர், அவரிடம் விசாரித்த போது தாங்கள் ரகசிய அறையில் அடைக்கப்பட்டிருந்ததாக மது  போதையில் அந்த இளைஞர் உளறி உள்ளார். இது குறித்து  பார் உரிமையாளர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர் கூறிய அந்த பண்ணை வீட்டில் பாதாள அறை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியவர் மற்றும் பாருக்கு வந்த இளைஞர் உட்பட 6 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதை தொடர்ந்து பண்ணைகளில் விளைந்த  பயிர்களை உண்டு 9 ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் தான் அந்த நபர்களை அடைத்து வைத்திருந்தாரா? என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.


Tags : teenagers ,cellar ,Netherlands , Netherlands, cellar, 9 years, 6 youth, one elderly, rescue
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்