×

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் மறுப்பு அறிக்கை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் மறுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு


விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. சீமானின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் மறுப்பு அறிக்கை

அவரது பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன்சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக் குழுவோ, ஆயுதக் குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம். எனவே ஆயுத மெளனிப்பிற்குப் பிறகும் இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம்.

எனினும் எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த விடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை. இன்றளவும் எம்மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கே உட்படுத்தப்படுகிறார்கள். பல முறை தன்னிலை விளக்கம் அளித்தும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. தொடர்கின்றன இது போன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajiv Gandhi ,LTTE ,assassination , Prime Minister Rajiv Gandhi, Murder, LTTE, Denial, Report
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...