×

அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிழித்ததால் பரபரப்பு

டெல்லி: அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைக்கு முடிவு காண பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் தீவிரம் காட்டியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்த நிலையில் விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விசாரணை நிறைவு பெறுகிறது. இதனால் இன்று நடைபெற்ற விசாரணையில், இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோபமடைந்து அந்த புத்தகத்தை கிழித்தார். இதனால் நீதிமன்றத்தில் லேசாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : lawyer ,Ayodhya ,book. ,organizations , Ayodhya case, Hindu organizations, filing, book, opposing lawyer
× RELATED நூலகத்தில் புத்தக தின விழா