×

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட இருக்கிறார்

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட இருக்கிறார். பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க அவர் டெல்லி விரைந்து இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்து கேள்வி எழும்பியது.

அதன்பிறகு இந்த தலைவர் பதவிக்கு பலருடைய பெயர்கள் அடிப்பட்டது. குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா, வானதி சீனிவாசன் , கருப்பு முருகானந்தம் என்று பலருடைய பெயர் அடிபட்டது. இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த பாஜக துணை தலைவராக இருந்த ஏ.பி.முருகானந்தம் பெயரும் அடிபட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் , ஏ.பி.முருகானந்தம் பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க அவர் டெல்லி விரைந்து இருக்கிறார். இந்த தகவலை அடுத்து கட்சியில் உள்ளவர்களுடன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.பி.முருகானந்தம் பற்றி சொல்ல வேண்டுமானால் பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் இவர் இருப்பார் என கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றபோது , அவருடன் ஒரு குழு சென்றது, அதில் ஏ.பி.முருகானந்தம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜக வின் ஒரு நம்பிக்கையான இடத்தில உள்ளார் என தெரிய வந்தது. இந்த சூழ்நிலையில் முடியுடைய ட்விட்டர் பக்கத்தில் 50.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதில் மோடி 2,301 பேர் மட்டுமே மோடி பின்தொடர்கிறார். அதில் தமிழ்நாட்டில் 5, 6 பேர் மட்டுமே இருப்பார்கள். ரஜினிகாந்த் போன்றவர்களை தொடர்ந்து தற்போது விஜயதசமி முதல் ஏ.பி.முருகானந்ததை மோடி பின் தொடர்கிறார். ஏ.பி.முருகானந்ததின் செயல்பாடுகளை உன்னிப்பாக பார்த்த பிறவு தான் மோடி ஏ.பி.முருகானந்ததை பின்தொடர்கிறார். இவை அனைத்தையும் வைத்து ஏ.பி.முருகானந்துக்கு தமிழக பாஜக தலைவராக வாய்ப்புகள் அதிகம் என பாஜக கட்சியினர் கருத்து சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.


Tags : AP ,Muruganantham ,Bharatiya Janata Party. ,Tamil Nadu , AP Muruganantham , appointed leader , Tamil Nadu , Bharatiya Janata Party
× RELATED காஷ்மீர் மாநிலத்தில் கிராம...