×

சிங்கப்பெருமாள் கோவிலில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதம் : தண்டவாளத்தில் இறங்கி நடந்த பயணிகள்

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட முறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மின்சார ரயில்களில்தான் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டது சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட்டில் லாரி நின்றதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.  

இதனால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ரயில்களில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்தனர். செங்கல்பட்டு மார்க்கமாக கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில் 1.30 நிமிடங்களுக்கும் மேலாக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கிண்டி, மாம்பலம், பார்க் ரயில் நிலையங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்களின் கூட்டம் அலைமோதியது. பின்னர் சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இத்தகு முன்னதாக கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதாலும் ரயில்வே சேவை அங்கு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : temple ,Singapore ,Singapperumal Temple , Electric Train, Service, Chengalpattu, Tambaram, School, College, Impact
× RELATED மே 15ம் தேதி பதவி விலகுகிறார் சிங்கப்பூர் பிரதமர்