×

அண்ணாசாலையில் இருதரப்பு மோதலின்போது வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் கோர்ட்டில் சரண்

தண்டையார்பேட்டை: சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் மலர்கொடி (51). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மகன் அழகுராஜா (31). இவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி மலர்கொடி தனது மகன் அழகுராஜா மற்றும் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), விஜயகுமார் (20) உள்ளிட்ட மேலும் சிலருடன் ஆட்டோ ஒன்றில் எழும்பூர் சென்றார்.  பின்னர், அதே ஆட்டோவில் அங்கிருந்து வீடு புறப்பட்னர். புதிய தலைமைச் செயலகம் அருகே பிளாக்கர்ஸ் சாலையில் சென்றபோது, மற்றொரு ஆட்டோவில் வந்த கும்பல், இவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில், மலர்கொடி காயமடைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அழகுராஜா ஆட்டோவில் தயாராக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து எதிர் தரப்பினர் மீது வீசினார். இதைத் தொடர்ந்து அரிவாளால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

தகவலறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த மலர்கொடி உள்ளிட்டோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அழகுராஜா, அவரது தாயார் மலர்கொடி மற்றும் ஆதரவாளர்கள் மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் அழகுராஜாவின் கூட்டாளி என கூறப்படும் பல்லாவரத்தை சேர்ந்த கவுதம் தலைமறைவாக இருந்தார்.  அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை  நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் அரிவாளால் தாக்குதல் நடத்தியது மயிலாப்பூர் சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமார் மற்றும் கூட்டாளிகள் தான் என்று கூறப்படுகிறது. அந்த கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : clash ,conflict ,Saran. ,bomb blast ,Anna Salai ,Court ,Saran , Glossary, Bilateral Conflict, Bombardment, Court
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...