×

பரங்கிமலையில் திரிந்த கேரள வாலிபர் மீட்பு

ஆலந்தூர்,: பரங்கிமலை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த கேரள வாலிபரை போலீசார் மீட்டு, கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.    பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் அக்பர் அலி, சந்தீப் பர்சார், எஸ்.ஐ ராஜரத்தினம், ஏட்டு அகஸ்டின் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிளாட்பார்மில் ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி அங்கும் இங்கும் சுற்றித் திரிவதை பார்த்தனர்.அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த வாசு என்பவரின் மகன் அனுபவ் (19) என்பதும், இவர் கடந்த மாதம் 15ம் தேதி கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மாயமானதும், வழித்தவறி சென்னை வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கோழிக்கோடு ரயில்வே போலீசாரிடம் விசாரித்தபோது, அனுபவ் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ேதடுவதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரள வாலிபருக்கு தேவையான உணவு, உடைகளை பரங்கிமலை போலீசார் வழங்கி, நேற்று காலை அவரை கேரள ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.



Tags : Wandering Kerala Youth Rescue ,Parangimalai Parangimalai Kerala Volunteer Rescue , Parangimalai, Kerala Volunteer Rescue
× RELATED பரங்கிமலையில் திரிந்த கேரள வாலிபர் மீட்பு