×

டென்மார்க் ஓபன் சிந்து முன்னேற்றம்

ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா டுன்ஜுங்குடன் நேற்று மோதிய உலக சாம்பியன் சிந்து 22-20 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டிலும் மரிஸ்கா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி விளையாடி புள்ளிகளைக் குவித்த சிந்து 22-20, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 24-22, 21-11 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் கிம் ஜி ஜங் - லீ யோங் டே ஜோடியை வீழ்த்தியது.



Tags : Denmark Open ,Sindh. Denmark Open , Improvement of Denmark Open, Sindh
× RELATED டென்மார்க் ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் சிந்து