×

சில்லி பாயிண்ட்

* சச்சின், லாரா, முரளிதரன் உட்பட 5 நாடுகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் டி20 தொடர் மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. ‘சாலை பாதுகாப்பு உலக தொடர்’ என்ற பெயரில் இந்த போட்டி நடைபெறும்.
* உலக கோப்பை டி20, ஒருநாள் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டு ‘டை’ ஆனால் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர் தொடரும், இனி பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
* டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆர்.அஷ்வினை விற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த முடிவை கிங்ஸ் லெவன் பஞாப் அணி நிர்வாகம் கைவிட்டுள்ளது.
* சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில் ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
* 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் விளையாடுவதை சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உறுதி செய்துள்ளார்.

Tags : countries ,Xin ,Muralitharan ,Lara , Xin, Laura, Muralitharan, 5 Countries
× RELATED ஐநாவில் உக்ரைன் தீர்மானம் 99 நாடுகள்...