×

வங்கியில் கடன் வாங்கி தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி

* இளம் பெண்கள் உட்பட 12 பேர் கைது
* மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: கடன் வாங்கி தருவதாக. பல கோடி ரூபாய் மோசடி செய்த 5 பெண்கள் உட்பட 12 பேர் கொண்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையில் பொது மக்களிடம் தொடர்பு கொண்டு வங்கிகளில் வீட்டுக்கடன், பர்சனல் லோன் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்  தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரகாஷ் விசாரணை நடத்தினார்.அப்போது, பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்ட செல்போன் எண்களை வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாடகைக்கு  எடுத்து, ‘பீனிக்ஸ் கால் சென்டர்’ என்ற பெயரில் பெயர் பலகை ைவத்து இளம் பெண்களை பணியில் அமர்த்தி மக்களிடம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சித்தாலப்பாக்கத்தில் உள்ள கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வங்கி வாடிக்கையாளர்களின்  பட்டியலை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கால் சென்டரில் பணி அமர்த்தப்பட்ட 5 இளம் பெண்களை வைத்து வசீகரமான குரலில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம்  கார்டு மற்றும் ரகசிய எண்களை பெற்று பல கோடி ரூபாய் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்தது தெரியவந்தது. இதுபோல் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களிடம் பேசி பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.   இந்த மோசடிக்கு போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் இளம் பெண்களை நேர்முக தேர்வு நடத்தி அதில் குரல் வளம் மிக்க பெண்களை தேர்வு ெசய்துள்ளார். இதற்காக இளம் பெண்களுக்கு மாத ஊதியமாக ₹10 ஆயிரம்  வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன்(26) மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 5 இளம் பெண்கள் உட்பட 12 ேபரை அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் யார்?
போலி கால் ெசன்டர் நடத்திய விழுப்புரம் மாவட்டம் பசுமலைதாங்கலை சேர்ந்த மணிகண்டன்(26) மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த தாம்பரத்தை சேர்ந்த முத்துகுமார்(21), காரப்பாக்கத்தை சேர்ந்த சிலம்பரசன்(23), திருப்போரூரை சேர்ந்த  சர்மிளா(32), வெட்டுவாங்கேணியை ேசர்ந்த முகமது இஸ்மாயில்(21), பள்ளிக்கரணையை சேர்ந்த ஆகாஷ்(21), திருவான்மியூரை சேர்ந்த வித்தியாசேகர்(24), தம்பரத்தை சேர்ந்த முத்துராஜ்(21), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி(27), கிரகம்பாக்கத்தை  சேர்ந்த ஜீவரத்தினம்(23), கண்ணகி நகரை சேர்ந்த மகாலட்சுமி(21), சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா(20) ஆகிய 12 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்  சகோதரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.



Tags : Call Center ,bank , Borrowing ,bank,call center ,rupees
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...