×

27ம் தேதி தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் பட்டாசு வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று ஒரு புதிய கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், “தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் குறிப்பாக பசுமை பட்டாசுகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், அது உடனடியாக நடைமுறைக்கு வர சாத்தியம் கிடையாது. மேலும் இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு என முன்னதாக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டது. அதையும் விற்பனை செய்தாக வேண்டும். அதனால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் வழக்கை  விரைந்து விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில், “பட்டாசு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று வருகிறார். அதனால் அவர் தனக்கான அமர்வில் இடம்பெறும்போது  முறையாக வழக்கை விசாரிப்பார். இதனிடையே பட்டாசு தொடர்பான வழக்கை எங்களால் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ எனஉத்தரவிட்டார்.இதற்கிடையே, பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.



Tags : Supreme Court ,hearing , celebration , Diwali ,fireworks, inquire
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...