×

மத்திய அமைச்சர் சவுபே மீது மை வீச்சு

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சலால் இதுவரை 900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர், அவர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் மீது அங்கிருந்த ேநாயாளிகளின் உறவினர்கள் சிலர் மை வீசினர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பீகார்  பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் சவுபே மீது மை வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மை வீசிவிட்டு தப்பி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Tags : Soubay. , Union Minister, Ink range , Soubay
× RELATED கொடைக்கானலில் வாகனப்போக்குவரத்தை...