×

அபிஜித்தின் ‘நியாய்’ ஒருநாள் நனவாகும்: பிரியங்கா வாழ்த்து

புதுடெல்லி: ‘‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வடிவமைத்த ‘நியாய்’ திட்டம் ஒருநாள் நனவாகும்’’ என பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுப்லோ, மற்றொரு பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதியான, ஏழைகளுக்கு ஆண்டுக்கு ₹72 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் நியாய் திட்டத்தை அபிஜித்தான் வடிவமைத்து கொடுத்தார்.

அவருக்கு டிவிட்டரில் நேற்று வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘உலக ஏழ்மையை ஒழிக்கும் அணுகுமுறைக்காக நோபல் பரிசு வென்ற அபிஜித்துக்கு பாராட்டுகள். காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் இடம்  பெற்ற நியாய் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவர் அபிஜித். அந்த திட்டம் நிச்சயம் ஒருநாள் நனவாகும்,’ என கூறியுள்ளார். ஏற்கனவே அபிஜித்துக்கு சோனியா, ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Priyanka ,Abhijit , Abhijit's ,notes,Priyanka, wishes
× RELATED சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில்...