ஆயிரம் ரூபா மட்டும் வாங்கிப்பீங்க வாய மட்டும் திறக்க மாட்டீங்க : ஓபிஎஸ் பேச்சால் பெண்கள் அதிருப்தி

விழுப்புரம்,  அக்.16: விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்  பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கிவிட்டு வாயமட்டும் திறக்கமாட்டீங்களே  என ஓபிஎஸ் பேசியதால் பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  காணையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  ஜெயலலிதா ஆட்சியின்  திட்டங்கள் சென்று கொண்டுதான் இருக்கிறது. கைவிடப்படவில்லை. கூடுதலாக  திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மகப்பேறு  நிதியுதவி 18 ஆயிரம் போன்றதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கினீர்களா? இல்லையா... பொதுமக்கள்  வாய்திறக்காததால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் பணம் வாங்கிவிட்டு வாயே  திறக்க மாட்டீங்களே என்று கூறியதால் பிரசாரத்தில் சலசலப்பு  ஏற்பட்டது. இதனால் பேச்சை முடித்து கொண்டார்.

Tags : OBS ,OpS , Thousands of rupees , buy only mouth open, women dissatisfied with OpS talk
× RELATED சிதம்பரம் அருகே கான்சாகிப்...