×

கண்காணிப்பு பொறியாளர் ஆபீசுக்கு டெண்டர் நாளில் பூட்டு : பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: டெண்டர் இறுதி நாளில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிடையந்த கான்ட்ராக்டர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உள்ளது. இதன் மூலம், பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் அந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் மூலம் இப்பணிகள் நடக்கிறது. இதில், சென்னை மண்டலம் சார்பில் வேளாண்துறை அலுவலகம், மாநில விருந்தினர் விடுதி, அரசு விருந்தினர் இல்லம், லேடி வெலிங்க்டன் அரசு மேல்நிலைபள்ளி, அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, கே.ேக நகர் வட்டார போக்குவரத்து கழகம், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு  உட்பட 14 பணிகளுக்கு ரூ.2.36 கோடி செலவில் கடந்த 27ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் விண்ணப்பம் சமர்பிக்க ேநற்று மாலை 3 மணி உடன் கடைசி நாள். இந்த நிலையில் சேப்பாக்கம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று மாலை 2.30 மணியளவில் 10க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தபுள்ளி பெட்டியில் டெண்டர் போட சென்றனர்.

ஆனால், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கான்ட்ராக்டர்கள் அங்கிருந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை ஊழியர்கள் திறந்தனர். தொடர்ந்து, அங்கு டெண்டர் விண்ணப்பத்தை போட ஒப்பந்தப்புள்ளி பெட்டி வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கான்ட்ராக்டர்கள் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். மேலும், ஒப்பந்த நிறுவனம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால் தான் அலுவலகத்தை பூட்டி விட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்கள். அதன்பிறகு ஊழியர்கள் கான்ட்ராக்டர்களிடம் டெண்டர் விண்ணப்பத்ைத தருமாறு கேட்டனர். ஆனால், கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் தான் போடுவோம் என்று கூறினார்கள். ஆனால், பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை சாவி எங்களிடம் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு கான்ட்ராக்டர்கள் தங்களது விண்ணப்பத்தை ஊழியர்களிடம் கொடுத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் ெபாதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Lockdown ,Inspection Engineer ,Office: Public Works Head Office ,Office: Stir in Public Works Head Office Inspection Engineer , Inspection Engineer's Office, Stir , Public Works Head Office
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...