×

அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு இறுதிபோட்டிக்கான கட்டுரை, பேச்சுபோட்டி, கவிதைக்கான தலைப்புகள் அறிவிப்பு

* திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான இறுதி போட்டிகள் வருகிற 19, 20ம் தேதி ஒசூரில் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சு போட்டி,  கட்டுரை போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தொடர்ந்து 12 ஆண்டாக நடக்கிறது. இந்தாண்டு 111வது பிறந்தநாளை கொண்டாடப்படுகிறது. இதன் மாநில அளவிலான இறுதி போட்டிகள் வருகிற 19, 20ம் ஆகிய இருநாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகரத்தில் உள்ள சிவரஞ்சனி ஓட்டல் வளாகத்தில் திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெறும்.

இறுதி போட்டியில் பேச்சுப்போட்டிக்கு, “கல்விக் கொள்கை அன்றும்... இன்றும்’’, ‘‘கலைஞர் கனவுகளின் செயல்வடிவம் தலைவர் ஸ்டாலின்” ஆகிய இரு தலைப்பில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும். கட்டுரை போட்டியில், “அன்னை தமிழும்-அண்ணா-கலைஞரும்’’ ‘‘பெரியார் என்றும் தேவை! ஏன்?” ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கவிதை ஒப்புவித்தல் போட்டியில், “நாற்பதாண்டு கால மொழிப்போரின் சிப்பாய்கள் நாம் என தொடங்கி இதயத்தில் வாழ்தல் வேண்டும்” என முடியும் தலைவர் கலைஞர் கவிதை.  முத்தமிழறிஞர் கலைஞர் பாடிய, ‘‘ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்!” எனத் தொடங்கி “கொள்ளை இலாபக்  கணக்கு!” என முடியும் கவிதையை ஒப்பித்தல் வேண்டும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக 25,000, இரண்டாம் பரிசு 15,000, மூன்றாம் பரிசு 10,000, ஆறுதல் பரிசு 5000 வீதம் ஒவ்வொரு போட்டிக்கும் 10 பேருக்கு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Announcement ,round ,birthday. ,Anna ,birthday , Announcement of title, speech and poetry topics,Anna's 111th birthday
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து