×

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம் திமுக: நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தளபதி சமுத்திரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நல்லாட்சி செய்தோம். தமிழகத்தில் அதிக ஊழல் நடைபெறும் துறையாக உள்ளாட்சி துறை உள்ளது. உள்ளாட்சி துறையில் நான் இருந்த போது நல்லாட்சி நடக்கிறதை என்று பெயர் வாங்கிக் கொடுத்தேன். அதிமுக அரசால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. குடிநீர், சாலை வசதிகள், மருத்துவ வசதிகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம் திமுக. மத்திய அரசிடம் ஜெயலலிதா என்றைக்குமே பணிந்து சென்றதில்லை; தற்போதைய அரசு மத்திய அரசிடம் பணிந்து செல்கிறது. முதல்வர் அமைச்சர்கள் போல் நான் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவில்லை; மேயர் கூட்டத்தையும் மெட்ரோ திட்டத்திற்காகவும் வெளிநாடு சென்று வந்தேன். முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : DMK ,Stalin , DMK, Nankuneri, Stalin
× RELATED சொல்லிட்டாங்க...