×

சட்டவிரோத வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவல் அக்.25-ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர், டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது ஜாமின் மனுக்களை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர்களான அமித் மகாஜன், நிதேஷ் ராணா மற்றும் என். கே மட்டா ஆகியோர், சிவக்குமாரின் நீதிமன்ற காவலை நீட்டிக்குமாறு கோரினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Tags : DK Sivakumar ,jail , Dikar Prison, DK Sivakumar, Court Detention, Ext
× RELATED பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை...