×

வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!

நெல்லை: நெல்லையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பசாமுத்திரம், ஆய்க்குடி, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி பாளையங்கோட்டை, பாபநாசம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி,  நெல்லை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே குற்றாலத்தில் கடந்த ஐந்து தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக பகல்  வேளைகளில் சற்று மழை பெய்த போதும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் குற்றாலம், தென்காசி பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம்  தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர்  கொட்டியதால் காலை 8.30 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து  அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kutralam , Permission to bathe in Courtallam Falls
× RELATED தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம்...