×

ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களை கடத்தி அதன் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளின் அடுத்த எண்ணம் கார்குண்டுகள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வந்த டிரக் ஒன்றின் ஓட்டுநர் ஷெரீப் கான் என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு கருதி ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


Tags : militants ,National Highway ,Kashmir Jammu and Kashmir Intelligence , alerts,threaten,militants,attack,National Highway ,Jammu and Kashmir
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...