×

பா.ஜ.வுக்கு ஓட்டுப்போட்டால் பாகிஸ்தான் மீது குண்டு போடுவதாக அர்த்தம்: உ.பி துணை முதல்வர் பேச்சு

தானே: ‘‘பா.ஜ.வுக்கு ஓட்டுப் போட்டால், பாகிஸ்தான் மீது குண்டு போடுவதாக அர்த்தம்’’ என தானேயில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசினார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில்  உள்ள மிரா பயந்தர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ சார்பில் நரேந்திர மேத்தா என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர்  பேசியதாவது:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் நடைபெறவுள்ள தேர்தலை உலகமே எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறது.

அதனால் ஒவ்வொரு வாக்காளரும் இந்த தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த தேர்தலின் முடிவு மக்களின் தேசபக்தியை வெளிப்படுத்தும். சட்டப்பேரவை தேர்தலில் தாமரை பட்டனை அழுத்துவது, பாகிஸ்தான் மீது அணு  குண்டு போடுவதாக அர்த்தம். தாமரை மீது லட்சுமி அமர்ந்திருக்கிறார். கையிலோ(காங்கிரஸ் சின்னம்), சைக்கிளிலேயா(சமாஜ்வாடி சின்னம்), கடிகாரத்திலோ( தேசியவாத காங்கிரஸ் சின்னம்) அமரவில்லை. தாமரை வளர்ச்சிக்கான சின்னம்.  பிரான்சில் ரபேல் போர் விமானத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘சாஸ்திர பூஜை’ செய்தது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pakistan ,bombing ,BJP ,Deputy Chief Minister Speech ,UP ,Deputy Chief Minister talks , BJP, Pakistan, Bomb, UP Deputy Chief Minister
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..