×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அப்பாவு கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அப்பாவு கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு  சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69, 590 வாக்கு,எம்.அப்பாவு 69,541 வாக்கு பெற்றனர். 49 வாக்குவித்தியாசத்தில்  இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதனை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை  எண்ணவும் உத்தரவிட்டது. அதேப்போல் இதில் கடைசி மூன்று சுற்றுக்கான வாக்குப் பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி, வாக்குகள் கடந்த வாரம் எண்ணி முடிக்கப்பட்டது.

இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்ற உத்தரவில்,” உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆனால் வாக்கு  எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்து வழக்கை வரும் 23ம் தேதிக்கு கடந்த 4ம் தேதி ஒத்திவைத்திருந்தது. அப்பாவு தரப்பு வக்கீல் நீதிபதி அருண் மிஸ்ரா  முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”23ம் தேதிக்கு முன்னதாகவே வழக்கை எடுத்து விரைந்து விசாரித்து நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’, என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி உத்தரவில்,”இந்த வழக்கை நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய தேதியில் தான் பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்ள முடியும். அதற்கு முன்னதாக விசாரிக்க முடியாது. மேலும் நீதிமன்றத்தில் பதிவாளர் அலுவலகம்  தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தலையிட விருப்பவில்லை என தெரிவித்த நீதிபதி அப்பாவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கு வரும் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.

Tags : hearing ,Radhapuram ,Dad ,Supreme Court , Radapuram Volume, Repeal Count, Supreme Court, Father
× RELATED பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு தடை