×

வங்கி இணைப்பை கண்டித்து 22ம் தேதி ஊழியர்கள் ஸ்டிரைக்: சென்னை போராட்டத்தில் அறிவிப்பு

சென்னை: வங்கிகள் இணைப்பை கண்டித்து வருகிற 22ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதில் 4 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வள்ளூவர் கோட்டம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அளித்த பேட்டி:. வங்கிகளுக்கு இருக்கும் ஒரே பிரச்னை 10 லட்சம் கோடி வராக் கடன் தான். வங்கிகள் இணைப்பின் மூலம் அந்த பிரச்னையில் இருந்து வங்கிகளின் கவனம் வேறு திசைக்கு திருப்பப்படும். வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படும் ஆபத்து தான் உள்ளது.

எனவே, வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு வங்கிகள் இணைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரி வருகிற 22ம் தேதி இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 4 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். 22ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகாவது மத்திய அரசு வங்கிகள் இணைப்பு முடிவை திரும்ப பெறாவிட்டால் தொடர் வேலை நிறுத்தம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்றார்.


Tags : Strike ,Chennai , Condemn bank, Strike Strike , 22nd
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து