×

அரசு சித்தா மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: 21ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசினர் சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்ைட, சென்னை ஆகிய இடங்களில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி.(சித்தா) பட்ட மேற்படிப்பிற்கு என மொத்தம் 80 இருக்கைகள் உள்ளன. இதில் சேர AIAPGET-2019ல்  (சித்தா) தகுதி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை சுகாதார துறையின் இணையதளமான www.tnhealth.orgல் இருந்து 15ம் தேதி (நாளை) முதல் 21ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் “செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை-106” சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 21ம் தேதி மாலை 5.30 மணி ஆகும்.

Tags : Government Siddha Medical College , Government, Siddha, Medical College,
× RELATED சென்னை ஐஐடியின் ஆன்லைன் படிப்புகளில்...