×

பிரதான் வலியுறுத்தல் விமான எரிபொருளை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும்

புதுடெல்லி: விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை. இவற்றின் வரி வருவாயை மாநிலங்கள் பெருமளவில் சார்ந்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அவற்றை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், மாநிலங்கள் எதிர்ப்பால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தி 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இதில் பெட்ரோலிய பொருட்களையும் சேர்க்க வேண்டும் என்று பெட்ரோலிய துறையில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, விமான பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும். இது நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழி வகுக்கும்’’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இன்னும் சில ஆண்டுகளில் 11,800 கோடி முதலீடு செய்யப்படும் என கட்கரி கூறினார்.

Tags : Pradhan , Pradhan insists, air fuels , GST
× RELATED நாடுமுழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் அசாம் இளைஞர் புதுகை வந்தார்