×

லின்ஸ் ஓபன் டென்னிஸ் கோகோ காப் சாம்பியன்

ஆஸ்திரியாவில் நடந்த லின்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 15 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டபென்கோவுடன் மோதிய கோகோ 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் டபுள்யு.டி.ஏ பட்டம் வென்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 2004ம் ஆண்டு தாஷ்கன்ட் ஓபனில் 15 வயது நிகோல் வாடிசோவா பட்டம் வென்றிருந்தார்.

Tags : Open Tennis Cocoa Cop Champion ,Linz , Linz, Open Tennis, Cocoa Cop Champion
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெளியேறினார் வீனஸ்